நாய் பயிற்சியாளராக நடித்துள்ள ஸ்ரீகாந்த்

நாய் பயிற்சியாளராக நடித்துள்ள ஸ்ரீகாந்த்
வேல்மாணிக்கம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடித்துள்ள படம் ‘தி டிரெய்னர்’.இதில் பிரின்ஸ் சால்வின் இளம் வயது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். த்ரில்லர் அக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை டிரான்ஸ் இந்தியா மீடியா என்டர்டெயின் மென்ட் பேனரின் கீழ் நீலா தயாரித்துள்ளார்.
இதில் ஸ்ரீகாந்த் நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் ‘லீ’ என்ற நாயும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. காவல்துறை அதிகாரியாக நடிகர் ஷ்யாம் நடித்திருக்கிறார்.பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு காவல் துறை உருவாக்கிய ‘காவலன்’ செயலியிலிருந்து உத்வேகம் பெற்று சமூகப் பொறுப்புள்ள படமாக இது எடுக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment