உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்
அதிகாலையில் பெருமாளை கண்விழிக்க செய்யும் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை பலர் பாடியுள்ளனர்.தற்போது இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார். அவரது குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் 20ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ வரும் 23ம் தேதி அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, சீ ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் சந்தீப் ரெட்டி தயாரித் துள்ளார்.15-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரி யாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதம் பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியால் பிரபலமானது.

Comments (0)
Add Comment