சைலண்ட் இன்ஃபுளூயன்சர் இசை ஆல்பம் வெளியீடு

சைலண்ட் இன்ஃபுளூயன்சர் இசை ஆல்பம் வெளியீடு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்,இயக்குனர் ராஜா பத்மநாபன் இயக்கத்தில் ‘ சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ என்ற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதில் பலராம் ஜெ. பாலாஜி நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார், ஐக்கி பெர்ரி ஆகியோர் குரல் கொடுத்து உள்ளனர். பாடலுக்கு அஸ்வமித்ரா இசையமைக்க, இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, ராம் கோபி எடிட்டிங் செய்துள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வெளியிட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர்கள் சரண்,பேரரசு,எழில்,
ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசை ஆல்பத்தை வெளியிட்டு வாழ்த்து பேசினர்.

Comments (0)
Add Comment