சிக்மா- விமர்சனம்

சிக்மா- விமர்சனம்
ஆந்திராவில் பெரிய தாதாவான சம்பத்துக்கு சொந்தமான ரூ.1,000 கோடி பணம் வெளிநாட்டில் உள்ள ரகசிய லாக்கரில் இருக்கிறது. அந்த லாக்கரை திறக்கும் 2 சாவிகளில் ஒரு சாவியை தனது நண்பரிடம் கொடுக்கிறார் சம்பத். இந்த நிலையில் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் சந்தீப் கிஷன், இருந்த பணத்தையும் சூதாட்டத்தில் இழந்து விழி பிதுங்கி நிற்கிறார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது கைகளில் பென்- டிரைவ் மற்றும் அந்த லாக்கரின் சாவி கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு சூதாட்ட கிளப் உரிமையாளரிடம் பணம் பறிக்க திட்டம் போடும் சந்தீப் கிஷன் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் மீதி கதை.
இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி யுள்ள ஜேசன் சஞ்சய், முதல் படத்திலேயே ஆக்‌ஷன், மாபியா, பணம், சஸ்பென்ஸ் என பரபரப்பான கதைக்களத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.ஆக்‌ஷன் காட்சிகளில் ஹீரோ சந்தீப் கிஷன் துடிப்பாக நடித்து கதைக்கு உதவியுள்ளார். கதாநாயகியான பரியா அப்துல்லாவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும், கிடைத்த காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அன்பு தாசனின் காமெடி,ராஜூ சுந்தரம் நடிப்பு ரசிக்க வைக்கிறது. சம்பத் மற்றும் ஷிவ் பண்டிட் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு ,தமனின் இசை படத்திற்கு இன்னும் வேகம் கூடுகிறது.

Comments (0)
Add Comment