ஒரு பாட்டுக்கு 3 கோடி வாங்கிய ஸ்ருதிஹாசன்

ஒரு பாட்டுக்கு 3 கோடி வாங்கிய ஸ்ருதிஹாசன்
ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பெத்தி. இதில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய , ஏ .ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.வரும் ஜூன் 4 ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை விருத்தி சினிமாஸ்,மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்துள்ளது. இதில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசன் நடனமாடியுள்ளார். இதற்காக அவருக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஹெல்லல்லோ என தொடங்கும் இந்தப் பாடல் இன்று (23ம் தேதி) வெளியாகிறது. இதற்கான புரோமோ நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

Comments (0)
Add Comment