அட்லி-அல்லு அர்ஜுன் பட ஷூட்டிங் துவக்கம்
இந்திய திரை உலகில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜவான் மற்றும் புஷ்பா-2 படத்துக்கு பிறகு அட்லி- அல்லு அர்ஜுன் இருவரும் புதிய படத்தில் சேர்ந்துள்ளனர். பான் கோல்ட் திரைப்படமாக உருவாகும் இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மூன்று கேரக்டர்களில் அல்லு நடிக்கிறார். அதற்காக மூன்று ஹீரோயின்கள் படத்தில் இருக்கின்றனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ள செட்டில் கடந்த 12ம் தேதி முதல் துவங்கியது. படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி பாணியில் உருவாகவுள்ளதால் படப்பிடிப்பிலும் பல விஎஃப்எக்ஸ் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.