இவ்வளவு கேமராவை பார்த்தா பயமா இருக்கு: நிகிலா விமல்
தமிழ், மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நிகிலா விமல். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து பிரபலமானார். தற்போது புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, நான் கேள்விகளுக்கு பயப்பட வில்லை. ஆனால் இத்தனை கேமராக்களை பார்க்கும் போது பயம் உருவாகிறது.திடீரென்று கேமராவை பார்க்கும் போது மிகவும் கடினமாக இருக்கும். கேமராக்களுக்கு முன்னாள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் நான் தயாராக இருப்பேன். ஆனால் திடீரென காரில் இறங்கும் போது டஜன் கணக்கில் கேமராக்கள் திரண்டிருந்தால் நான் பயப்படும் நிலை உள்ளது. அப்போது கேள்விகளுக்கு நான் தயாராகவில்லை எனக் கூறியுள்ளார்.