நூறு சாமி படம் பற்றி மனம் திறந்த சசி..!!
இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘நூறு சாமி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இதில் சுவாசிகா, அஜய் திஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒற்றைத் தாய் (சிங்கிள் மதர்) குறித்த உணர்வுபூர்வ கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும்19ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் சசி கூறியது, “தாயை தெய்வமாக மதித்தான் அது ‘பிச்சைக்காரன்’, தாயை மனுஷியாக பார்க்க தொடங்கினான் அது ‘நூறு சாமி’. இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் வெகு காலம் பேசப்படும். ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிரு க்கிறார் விஜய் ஆண்டனி என்றார்.