மகன் இயக்கிய படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா:
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள “சிக்மா” படம் நேற்று (அக்.,2) ரிலீஸ் ஆனது. இதில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க, ஃபரியா அப்துல்லா ஹீரோயினாக நடித்துள்ளார். சென்னை கமலா தியேட்டரில் நேற்று முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அந்த படத்தில் பங்கேற்ற நடிகர்கள், தயாரிப்பாளர் தமிழ் குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் திடீர் சர்பிரைஸ் ஆக ஜேசன் சஞ்சய் தாயார் சங்கீதா, அவரது சகோதரி திவ்யா சாஷா ஆகியோரும் கமலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் திவ்யா. அவர் போட்டோ வீடியோ கூட வெளியே வராமல் இருந்தது. அதேபோல் சங்கீதாவும் பல மாதங்களாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை இந்த நிலையில் இருவரும் லண்டனில் இருந்து படம் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.