கவின் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

கவின் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்
இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின்,பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி பாய்ஸ் ஆர் பேக் என்ற போஸ்டருடன் இருக்கும் வீடியோ ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.இப்படத்திற்கு ஓஃப்ரோ இசையமைக்கிறார்.

Comments (0)
Add Comment