ரூ.1,783 கோடி வசூல்:துரந்தர் 2 புதிய சாதனை
ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் துரந்தர் பழிவாங்கல். இப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து உள்ளது. திரையரங்குகளில் ஒரு மாதத்தை நிறைவு செய்தும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 5 வார இறுதியிலும் இதுவரை இந்தியாவில் ரூ.1,153 கோடி மற்றும் உலகளவில் ரூ.1,783 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.