சுகுமார் இயக்கத்தில் ராம்சரண்

சுகுமார் இயக்கத்தில் ராம்சரண்
தெலுங்கு நடிகர் ராம்சரன் நடித்த கேம் சேஞ்சர் மற்றும் பெத்தி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான கேம் சேஞ்சர் படம் படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு புஜ்ஜி பாபு சனா
இயக்கத்தில் பான் இந்திய படமாக வெளியான பெத்தி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் ராம்சரண் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஆர்.சி.17 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டு ள்ளது.தற்போது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘பெத்தி’ படப்பிடிப்பின் போது கையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் ராம்சரண் விரைவில் இந்த படப்பிடிப்பில் பங்கேற்பார் என தெரிகிறது.

Comments (0)
Add Comment