ராம் சரனிண்‘பெத்தி’ ரிலீஸ் தேதி மாற்றம்

ராம் சரனிண்‘பெத்தி’ ரிலீஸ் தேதி மாற்றம்
ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பெத்தி. இதில் ஜானகி கபூர் ஹீரோயினாக நடிக்க, சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு இந்த படத்தை தயாரித்துள்ளார். கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமாவான இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 30 என மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதோடு புரமோசன் பணிகளுக்கும் படக்குழு தயாராகி வருகிறது.

Comments (0)
Add Comment