ராம் சரணின் பெத்தி பட டிரெய்லர் ரிலீஸ்
ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பெத்தி”. இதில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்க, முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆக்ஷன், ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனையுடன் இயக்குனர் அழகாக எடுத்துள்ளார். வரும் ஜூன் மாதம் 4ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.