ராஜு அவுட் ஸ்டாண்டிங் ஹீரோ:பவ்யா திரிக்கா
பிக்பாஸ் பிரபலம் ராஜு ஹீரோவாக நடித்துள்ள படம் “பன்பட்டர் ஜாம்”. இந்த படத்தை ராகவ் மிர்தா இயக்கி உள்ளார். சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிக்கா, சார்லி, சரண்யா பொன் வண்ணன், தேவதர்ஷினி நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பவ்யா திரிக்கா பேசியது,ராஜூவைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவுட் ஸ்டாண்டிங். காட்சிகளில் நடிக்கும் போது வெளியில் இருந்து என்னை சிரிக்க வைப்பார். எனக்கு அது கஷ்டமாக
இருந்தது. ராஜூவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றார்.