ரஜினியின் கூலி படத்திற்கு ஏ சான்று

ரஜினியின் கூலி படத்திற்கு ஏ சான்று
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி(இன்று) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முனைப்பு காட்டியுள்ளனர்.
கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் ஓடும் திரைப்படமாக உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்திற்கான புரமோஷன்களை வித்தியாசமான முறையில் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், தணிக்கை வாரியம் கூலி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment