விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய ரஜினி
நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘கண்ணப்பா’ . இந்த படத்தை மோகன் பாபு தயாரித்துள்ளார். வரும் 27-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.இந்நிலையில் ‘கண்ணப்பா’ படம் நடிகர்
ரஜினிக்கு முன்கூட்டியே காட்டப்பட்டது. படத்தைப் பார்த்து அவர்,விஷ்ணு மஞ்சுவை, கட்டிப்பிடித்து பாராட்டினார். இதுகுறித்து விஷ்ணு மஞ்சு கூறும் போது, ரஜினியின் அணைப்புக்காக 22 ஆண்டுகள் காத்திருந்தேன் அது தற்போது நிறைவேறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.