நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி

நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி
கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப் குமார். அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தையும், ரஜினி நடித்த ஜெய்லர் படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது ரஜினி நடிக்கும் ஜெய்லர் 2 படத்தையும் இயக்கி வருகிறார்.

 

நேற்று இயக்குனர் நெல்சனுக்கு பிறந்தநாள் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர் இயக்கிய படங்களில் இருந்து சிறப்பு காட்சிகளை தொகுத்து வீடியோ ஒன்றை பிறந்தநாள் பரிசாக வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சனுக்கு, ரஜினி அவருக்கு கேக் ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Comments (0)
Add Comment