நண்பனுக்காக களமிறங்க ரஜினி
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து எப்போது நடிக்க போகிறார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க போகிறார் என்ற செய்தி இருதரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நண்பர்களாக திகழும் ரஜினிக்கும் கமல் ஹாசனுக்கும் இடையிலான அன்பு இப்போதும் பெரிதாக பேசப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார் .இந்த
படம் ரஜினியின் 173-வது படமாகும். 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீசாக உள்ளது. இதை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. புதிய
படத்திற்கான ஒப்பந்தம் கமல்ஹாசன் அலுவலகத்தில் நேற்று முன் தினம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல்,சுந்தர்.சி.,ராஜ் கமல் பிலிம்ஸ் நிர்வாக அதிகாரி மகேந்திரன் பங்கேற்றனர்.