ரஜினி, கமல் இணையும் பட ப்ரோமோ ஷூட்

ரஜினி, கமல் இணையும் பட ப்ரோமோ ஷூட்
கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக இருவரும் அறிவித்தனர். அந்த படத்திற்கான இயக்குனர் முடிவாகாத நிலையில் தற்போது அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பது கன்பார்ம் ஆகி உள்ளது. இதனால் 40 வருடங்களுக்கு பிறகு ரஜினி,கமல் இணைவது உறுதியாகி விட்டது. இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. அதற்காக ப்ரோமோ ஷூட் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினி கமல் இருவரும் பங்கேற்றனர். கார் மெக்கானிக் செட் மற்றும் ஹோட்டல் செட் என இரண்டு செட்டுகள் அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் இந்த ப்ரோமோ ஷூட்டிங் நடக்கிறது. இது ரஜினிக்கு 174 வது படமாகவும், கமலுக்கு 238 வது படமாகவும் தயாராகிறது.இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Comments (0)
Add Comment