ஆக்சன் ஹீரோயின் ஆக மாறிய ரைசா வில்சன்

ஆக்சன் ஹீரோயின் ஆக மாறிய ரைசா வில்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன், வெள்ளித்திரை யில் பியார் பிரேமா காதல் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து விஐபி 2, மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நோவா என்ற படம் மூலம் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார். ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மிலோ இயக்குகிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் பேண்டஸி திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் குறித்து ரைசா வில்சன் கூறியது, இந்த படத்துக்காக மிகுந்த சிரமப்பட்டு ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளேன்.அடுத்து ஜி.வி பிரகாஷுடன் “காதலிக்க யாருமில் லை” படத்தில் நடித்துள்ளேன்,95 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அதோடு”சேஸ்” என்கிற படமும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment