அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே
புஷ்பா படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கி வரும் ராக்கா படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஹீரோயினாக பூஜாஹெக்டே நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.அல்லு அர்ஜுனும், பூஜா ஹெக்டேவும் ஏற்கனவே டிஜே, அலா வைகுந்த புரமுலு ஆகிய படங்களில் நடித்துள்ளனர். மீண்டும் இந்த ஜோடி 3வது முறையாக இப்படத்தில் இணைய இருக்கிறது. எல்.சி.யு. பாணியில் படத்தின் திரைக் கதையை லோகேஷ் உருவாக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.