‛ பரம் சுந்தரி’ ஜான்வி கபூர் பராக்…

‛ பரம் சுந்தரி’ ஜான்வி கபூர் பராக்…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர். தற்போது ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக பரம் சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் துஷார் ஜெலோட்டா இயக்கியுள்ள இந்த படம் வட இந்தியா பையனுக்கும், தென்னிந்தியா பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது.

இப்படத்தை முதலில் ஜூலை 25ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர், ஆனால் சாயரா படம் ரிலீஸ் ஆனால் பின்வாங்கினர். தற்போது இப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். அதோடு பரம் சுந்தரி படத்தின் முதல் பாடலும் நேற்று வெளியானது.

Comments (0)
Add Comment