அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ 28-ல் ரிலீஸ்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ்,அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படம், வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.இதில் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப்,இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர் மற்றும் “இந்திரா”, “வா கண்ணம்மா” பாடல்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.