எனக்கு பிடித்த நடிகர் விஜய்: விஷால்

எனக்கு பிடித்த நடிகர் விஜய்: விஷால்
விஷால் இயக்கி நடித்துள்ள படம் ‘மகுடம்’. இதில் ஹீரோயினாக அஞ்சலி, துஷாரா விஜயன் நடித்துள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வரும் 14-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விஷால் பேசியது, ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். அந்த சூழ்நிலையில் எல்லோரும் அவ்வளவுதான். இனி எழுந்து வர மாட்டான். இதோட கதை முடிஞ்சுது என நினைத்தனர். அப்போது 14 மாதங்கள் நான் வீட்டில் சும்மா இருந்தேன். இந்த படத்திற்காக 24 மணி நேரம் உழைத்தேன். அதனால் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை ரொம்ப பாதித்தது. இருந்தாலும் இந்த படம் நல்ல வரணும் என்பதற்காக எனக்கு துணையாக இருந்த என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவு க்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். எனக்கு பிடித்த நடிகர் விஜய், தற்போது அவர் முதல்வராகி விட்டார்.அவரின் படத்தை பார்த்து ரசித்த ரோகிணி தியேட்டரில் எனது மகுடம் படத்தையும் பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.

Comments (0)
Add Comment