ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர்
காமெடி நடிகர் ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்கும் முதல் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் லீட் ரோலில் நடிக்கிறார். அவருடன் ராகுலும் முதன்மையான ரோலில் நடிக்கிறார். மேலும் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார்.காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார்.