த்ரில்லர் படத்தில் மிரட்டும் பாவனா

த்ரில்லர் படத்தில் மிரட்டும் பாவனா
திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது அபாரமான நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பாவனா. தற்போது இவர் தனது 90வது படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார். ‘நம்மல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி’ படத்தில் அவர் தனது திரையுலக வாழ்க்கையின் மிகக் கடினமும், ஆழமும் கொண்ட பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார்.இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். இதில் ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment