நிறக்கேலியால் காயப்பட்ட மீனாட்சி சவுத்ரி
விஜய் நடித்த கோட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, தனது தோல் நிறம் காரணமாக இளம்பருவத்தில் கேலி கிண்டல் எதிர்கொண்டது குறித்து அளித்த பேட்டியில் கூறியது, அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். கிராமத்தில் எனது நிறம் மற்றும் உருவம் குறித்து விமர்சனம் செய்வது மட்டுமின்றி உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என கூறி கிண்டல் செய்து வந்தனர்.இப்படி பல விமர்சனங்கள் என்னை காயப்படுத்தின. இதனால் நான் ஒரு வைராக்கியத்துடன் வாழ்க்கையில் சாதிக்கmவேண்டும் என நினைத்து டாக்டராக விரும்பினேன். நானும் அழகு தான் என உலகுக்கு காட்ட நினைத்தேன்.என் அழகை நிரூபிக்க மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதன் பிறகு என் கிராமத்திற்கு போன போது என்னை கேலி செய்தவர்கள் தலைகுனிந்தனர்.