டாக்டராக ஆசைப்பட்ட மமிதா பைஜூ
மலையாள நடிகை மமிதா பைஜூ, பிரேமலு படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமானார்.தற்ப்போது விஜய் உடன் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் மற்றும் சூர்யா 46 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டியில், ‛‛நான் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது கூட டாக்டர் கனவு இருந்தது. ஆனால், 7 படங்களில் நடித்தபின் அந்த கனவை கைவிட்டு விட்டேன். முதலில் அதற்காக அப்பா வருத்தப்பட்டார். ஆனாலும் ஆதரவு கொடுத்தார். காரணம், அவர் நடிகராக நினைத்தார். ஆனால் அவர் டாக்டர் ஆகிவிட்டார் என்று கூறியுள்ளார்.