மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிப்பு.

செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது.

ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற வாரியக் கூட்டத்தின் போது இந்த முடிவு இறுதி செய்யப்பட்டது.

இந்த தேர்தலில் பெரும்பான்மையுடன், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

அதே நேரத்தில் எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி ஒரு வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

Comments (0)
Add Comment