லெனின் பாண்டியன்- விமர்சனம்
விவசாயி கங்கை அமரன் வளர்க்கும் ஆட்டை, மணல் கொள்ளை கும்பல் லாரி ஏற்றிக் கொன்று விடுகிறது. தனது ஆட்டை கொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்க கோரி காவல் நிலையம் செல்லும் அவர் அங்கு அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் உயர் நீதி மன்றத்தை நாடும் அவருக்கு நீதி கிடைத்ததா? அதிகார வர்க்கத்தின் கொட்டம் அடங்கியதா? என்பதே படத்தின் மைய கதை. கிராமத்து விவசாயி கேரக்டரில் கங்கை அமரன் கச்சிதமாக பொருந்தி உள்ளார். அவரது மனைவியாக நடித்துள்ள ரோஜா சிறப்பாக நடித்து கவர்கிறார். கதையில் இளம் ஹீரோவாக நடித்துள்ள தர்ஷன் கணேசன், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளார்.
ஷர்தா ராவ் நடிப்பும் பலம் சேர்க்கிறது. மேலும் போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். மணல் கொள்ளையை மையமாக வைத்து சமூகப் பிரச்சினையை யும், ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தையும் இணைத்து இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் படத்தை உருவாக்கி யிருக்கிறார். இரண்டாம் பாதிய சற்று சறுக்கல். எட்வின் சாகே ஒளிப்பதிவு கிராமத்து பின்னணியை இயல்பாக பதிவு செய்திருக்கிறது. இளையராஜாவின் இசை நம்மை தாலாட்டுகிறது.