மர்டர் இன் டவுன் படத்தில் போலீசாக நடிக்கும் கிருஷ்ணா

மர்டர் இன் டவுன் படத்தில் போலீசாக நடிக்கும் கிருஷ்ணா
மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘மர்டர் இன் டவுன்’ படத்தை, பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ளார். இது அவரின் 25 வது படமாகும். இதில் பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும், பால சரவணன், வைபவ் முருகேசன், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், சரவணன், ஐ.எம். விஜயன், கிரிஷ் தயாள், கஜராஜ், தர்ஷிகா, பேபி நைனிகா, ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தின் வசனங்களை கோடங்கி’ வடிவேல் எழுதியுள்ளார்.ரஞ்சன் இசையமைக்க, டி.கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.விறுவிறுப்பான புலனாய்வு குற்றத் திரில்லராக உருவாகியுள்ள இதில் போலீஸ் அதிகாரியாக கிருஷ்ணா நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

krishnamurder in townsri vishnu creations
Comments (0)
Add Comment