கியாரா அத்வானி சம்பளமா இவ்வளவு கோடியா?
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தற்போது டாக்சிக் படத்தில் நடித்துள்ளார்.அந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான தபாஹி பாடலில் யாசுடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மனைவியான கியாரா அத்வானி தனது 35-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதை ஒட்டி அவருக்கு டாக்ஸிக் பட குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டாக்சிக் படத்துக்காக ரூ 15 கோடி அவர் சம்பளம் வாங்கியுள் ளார். ஆரம்ப கால கட்டத்தில் ஒரு படத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கிய அவர் தற்போது கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி 15 கோடியை தொட்டுள்ளார்.