இளமை ரகசியத்தை சொன்ன கியாரா அத்வானி

இளமை ரகசியத்தை சொன்ன கியாரா அத்வானி
ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார்-2 படத்தில் கியாரா அத்வானி ஹீரோயின் ஆக நடித்துள்ளார். சமீபத்தில் அவருடைய தோற்றங்கள்
வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் கியாரா அத்வானி தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அவர் தனது உணவு பழக்க வழக்கங்கள் குறித்து கூறியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் விரும்பி சாப்பிடுகிறார்,காலையில் ஓட்ஸ் மாவு, வால்நட் மாவு, புரத பொடி, மேப்பிள் சிரப், மோஸ்க் பழம் சேர்க்கப்பட்ட பான்கேக்கு களை எடுத்துக் கொள்கிறார். உடல் எடை கூடி விட்டால் அதே வேகத்தில் எடையை குறைத்து விடுவாராம். நடனமும், நீச்சலும் அவருக்கு பிடித்த ஒன்று என கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment