50 கோடியில் காசி செட்
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் பிரியங்கா சோப்ரா, நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இதில் முக்கிய காட்சி வாரணாசியில் நடப்பதாக இருக்கிறது. அங்கு படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ரூ.50 கோடி மதிப்பில் வாரணாசி போன்று தத்ரூபமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கென்யாவில் சில காட்சிகளை எடுக்க உள்ளனர்.