செப்டம்பர் 10 ல் கார்த்தியின் ‘சர்தார் 2′
கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சர்தார். இந்த படத்தில் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சர்தார் 2’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரிக்கின்றனர்.மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.