இளையராஜாவுடன் கைக்கோத்த கார்த்திக் சுப்புராஜ்

இளையராஜாவுடன் கைக்கோத்த கார்த்திக் சுப்புராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றது. கார்த்திக் சுப்புராஜின் இந்தப் படத்திற்கு முதல் முறையாக இளையராஜா இசையமைக்கி றார். இது அவருடைய 1540 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment