ஜி.வி.பிரகாஷ் பட பாடலை வெளியிட்ட கார்த்தி

ஜி.வி.பிரகாஷ் பட பாடலை வெளியிட்ட கார்த்தி
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் படம் ‘மென்டல் மனதில்’ இதில் ஜி வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின் லீட் ரோலில் நடிக்க,இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக் கிறார்.இந்தத் படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.இந்த படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடல் மற்றும் லிரிக்கல் வீடியோவை நடிகர் கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment