தமிழில் பாட்டு அசத்திய கன்னட நடிகை சைத்ரா

தமிழில் பாட்டு அசத்திய கன்னட நடிகை சைத்ரா
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்,சைத்ரா, குரு சோமசுந்தரம் உள்பட பலர்நடிப்பில் உருவாகி உள்ள படம் மை லார்ட். ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்த படம் வரும் 13-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதைஒட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, மாரி செல்வராஜ், ஞானவேல், பிரேம்குமார், ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் கவிஞர் யுகபாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில் நடிகை சைத்ரா பேசியது, இது தமிழில் எனக்கு இரண்டாவது படம். தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தின் மூலம் அது இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் அதிகமாக உள்ளது எனக் கூறிவிட்டு அந்த படத்தில் இடம்பெற்ற பாடலை அழகாக பாடி கிளாப்ஸ் அள்ளினார்.

Comments (0)
Add Comment