கேன்ஸ் திரைவிழாவில் “தாழ் திறவா”
உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.பார்மேன் பிச்சர்ஸ் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.இப்படத்தின் டீசர் மே 19ம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.