ஜோதிகாவின் “சிஸ்டம்” பட டிரெய்லர் ரிலீஸ்
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள படம் சிஸ்டம். இதில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் படமான உருவாகியுள்ள இதை பவேஜா ஸ்டுடியோஸ் தயாரிக்க, ப்ரைம் வீடியோ ஒரிஜினல் படமாக வெளியாகிறது. வரும் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படத்தில் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.