ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆர் படுகாயம்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் “டிராகன்”. இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காயம் முழுமையாக குணமாக 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்றும், அதுவரை கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள். இதனால் தற்போது டிராகன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஜூனியர் என்டிஆரின் உடல்நிலை தேறிய பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளர்கள். 2027ம் ஆண்டு ஜூனில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், அணில் கபூர்,பிஜு மேனன், குரு சோமசுந்தரம், குஷ்பூ சுந்தர் ஆகியோர் முக்கியம் வேடங்களில் நடிக்கிறார்கள்.