காதலரை அறிமுகப்படுத்திய ஜியா சங்கர்

காதலரை அறிமுகப்படுத்திய ஜியா சங்கர்
‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜியா சங்கர். அதோடு இந்தி டிவி தொடர்களில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். மராத்தி மொழியில் ரிதேஷ் தேஷ்முக்குடன் ‘வேத்’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஜியாசங்கர் தனது காதலரை அறிமுகம்
செய்து அவருடன் விரைவில் நிச்சயம் நடைபெற உள்ளதை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் காதல் கிடைக்கிறது. ஆயிரக்கணக் கான மைல் கல் தொலைவில் இருந்தாலும் கரணுடன் பேசிய ஒவ்வொரு உரையாடலும் வீட்டை போல் உணர்ந்தேன்.குறும்புக்காரன் மற்றும் என் சிறந்த நண்பன் கரணுடன் என்றென்றும் வாழ ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment