ஜீவி பிரகாஷின் “வெக்கை” பட ஃபர்ஸ்ட் லுக்
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ்,இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றுகிறது என்பதைக் கூறும் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. சென்னை நகரின் பின்னணியில் நடைபெறும் இந்தக் கதையில் ஜீவி பிரகாஷ் உடன் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.