ஜனநாயகன் லீக் துரதிஷ்டவசமானது: மமீதா பைஜூ
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், சென்சார் பிரச்சினையால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் முழுப்படமும் இணையத்தில் லீக்கானாது.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமிதா பைஜு இதுகுறித்து கூறியது, “இது மிகவும் ஏமாற்றமும், வேதனையும் தருகிறது. எத்தனையோ பெரும் கனவுகளும், கடின உழைப்பும் இந்த வெளியீட்டினால் வீணாகப் போயுள்ளது.ஆரம்பத்தில்இந்த வெளியீடு குறித்து சமூக வலைதளத்தில் வந்த தகவல்களை நம்பவில்லை. ஏனென்றால் அவற்றில் வரும் அனைத்தையும் நம்பிவிட முடியாது. என் சகோதரர் தான் முதன் முதலில் இந்த வெளியீடு குறித்து தெரிவித்தார். ஏன் இப்படி என நினைத்தேன். இது மிகவும் துரதிஷ்ட வசமானது என்றார்.