லவ் தொடரில் தாராவாகவே மாறிவிட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக வும், தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘#லவ்’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வு கள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவை கலந்து உணர்வுப்பூர்வமாக சொல்லி உள்ளனர். நெட்பிலிக்ஸில் வெளியாக உள்ள இந்த தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா லட்சுமி பேசியது, இந்தத் தொடரில் தாராவாக நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பல நேரங்களில் நான் நடிக்கவே இல்லை, அந்த கேரக்டராகவே இருந்தேன். காதல் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதற்கு லவ் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இதற்கு முன்பு அர்ஜுனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தோம்; அது நடக்காமல் போனதால் வருத்தப்பட்டேன். ஆனால் தற்போது சேர்ந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சி. நல்ல விஷயங்கள் நடக்க சில நேரங்களில் காலம் தேவைப்படும் என்றார்