ஹீரோயின்களுக்கு பைட் சீன் கிடைப்பதே அபூர்வம்: அபிராமி

ஹீரோயின்களுக்கு பைட் சீன் கிடைப்பதே அபூர்வம்: அபிராமி
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜூன்,அபிராமி, பிரித்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பிளாஸ்ட்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவிபசூர் இசையமைத்துள்ளார். வரும் 28-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை அபிராமி பேசியது,25 வருடத்திற்கு பிறகு அர்ஜூனுடன் மீண்டும் நடித்ததில் ரொம்பமகிழ்ச்சி. எதற்கு 25 வருடம் ஆனது என்று எனக்கு புரியவில்லை. சண்டைக்காட்சிகளில் பெண்களை நடிக்க வைப்பதே அபூர்வம். விரல் விட்டு எண்ணும் அளவில் தான் படங்கள் வந்துள்ளது. எனக்கு இந்த கேரக்டர் கொடுத்த இயக்குனருக்கு நன்றி என்றார்.இதில் கராத்தே பயிற்சி பெற்ற அதிரடி பெண்ணாக அபிராமி நடித்துள்ளார். கராத்தே மாஸ்டரான அர்ஜூனுடன் சேர்ந்து எதிரிகளை பந்தாடி இருக்கிறார்.

Comments (0)
Add Comment