ஏ ஆர் முருகதாஸ் குறித்து ஜெய் சொன்ன சுவாரஸ்ய தகவல்

ஏ ஆர் முருகதாஸ் குறித்து ஜெய் சொன்ன சுவாரஸ்ய தகவல்
ஜெய் நடிப்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இதில் மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவர்களுடன் யோகி பாபு, கருட ராம்,ஸ்ரீமன் உள்பட பலரும் நடித்துள்ளனர். இன்றைய சமகால பிரச்சினைகளை அழுத்தமாக பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ஜெய் பேசியது, பொதுவாக என்னிடம் உனக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்பார்கள். நான் எப்போதுமே முருகதாஸ் பெயரை தான் சொல்வேன்.அவருக்கே தெரியாமல் நிறைய விஷயங்களை நான் அவரிடம் இருந்து பின்பற்ற தொடங்கினேன். ஒரு நாள் படப்பிடிப்பில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயத்தை இன்னும் என் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன் என்றார்.

Comments (0)
Add Comment