லவ் மூடில் அட்டகத்தி தினேஷ்
அட்டகத்தி” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அதன்பின்பு “அட்டகத்தி தினேஷ்” என அழைக்கப்படுகி றார். அதன்பின் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், விசாரணை, ஒரு நாள் ஒரு கூத்து, லப்பர் பந்து ஆகிய படங்கள் அவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தன.தற்போது வேட்டுவம், பந்தா கேங்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் தினேஷ் நேற்று முன்தினம் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரும் விஜே எழிலரசியும் காதலிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு எழிலரசி அவருடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் அன்புக்குரியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் உனக்குச் சிறந்தவை மட்டுமே அமையட்டும். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உன்னையேதான் தேர்ந்தெடுப்பேன் எனக் கூறியுள்ளார்.தினேஷூம் எழிலரசியும் கடந்து சில வருடங்களாகவே காதலித்து வருவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். இவர்களது திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.