நயன்தாரா இல்லைனா த்ரிஷா…!!
‘சர்தார் -2’ படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி, மார்ஷல் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார்? என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. முதலில் நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அவரின் கால்ஷீட் கிடைத்தால் கார்த்தியுடன், காஷ்மோரா படத்துக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பார். அவரின் தேதிகள் ஒத்து வர வில்லை எனில் நயன்தாராவுக்கு பதில் திரிஷாவை அணுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தி ஜோடியாக நயன்தாரா இல்லைனா திரிஷா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.